கோவை மாநகராட்சியில் 566 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல், ரூ.59,650 அபராதம்

கோவை மாநகராட்சியில் மே மாதம் 1-ம் தேதி முதல் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த 15.07.2017 முதல் 21.07.2017 வரை 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 530 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் மொத்தம் 566 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இன்று (21.07.2017) பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் ரூ.59,650 விதிக்கப்பட்டது.

இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், “பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதி 2016 அறிவிப்பின்படி மாநகராட்சியின் சுற்றுபுறசூழலைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் அழகினை பராமரிக்கவும், பாதுகாக்கவும், 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள் ஆகியவைகளை கோவை மாநகராட்சிப் பகுதியில் உற்பத்தி செய்யவும், உபயோகிக்கவும், விற்பனை செய்யவும், கையிருப்புகள் வைத்திருக்கவும் 2017 மே மாதம் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.

மேலும், அவற்றை கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கும், உபயோகிப்பாளர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த 15.07.2017 முதல் 21.07.2017 வரை கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் ஆய்வு மேற்கொண்டதில் மொத்தம் 530 கடைகளில் 566 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் இன்று பறிமுதல் செய்யப்பட்டு, அபராதத் தொகையாக ரூ.59,650 விதிக்கப்பட்டது.

மேலும், இந்த ஆய்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், சிறு மற்றும் பெரு வியாபாரிகள் மாநகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...