டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவையில் மழைகாலம் துவங்கி விட்ட காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தடுப்புப் பணிகள் மண்டல வாரியாக தீவிர கண்காணிப்புடன் சிறப்பு கவனம் செலுத்தி கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். 

மாநகராட்சியில் பணிபுரியும் கொசு ஒழிப்பு பணியாளர்களுடன் கல்லூரி அலுவலர்கள் மற்றும் மாணவர்களை கொண்டு மாநகராட்சி 5 மண்டல வார்டு பகுதிகளில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று (21.07.2017) மாநகராட்சி ஐந்து மண்டல உதவி ஆணையர் தலைமையில், மண்டல சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுடன் மண்டல வாரியாக டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்ச்சியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் மூலமும், அரசு  வெளியிட்டுள்ள டெங்கு விழிப்புணர்வு குறும்படம் மூலமும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகர நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார் விளக்கிக் கூறினார். மேலும், இதனை நலச்சங்கங்கள் மூலம், குடியிருப்பவர்களுக்கும் எடுத்துரைக்க வழியுறுத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ச்சியாக இது போன்று பல்வேறு டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக டெங்கு தடுப்பு பணிக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாறும், மேலும் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும், சுயமாக மாத்திரை மருந்துகள் உட்கொள்ள வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...