பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைந்த 'ஸ்மார்ட் பென்ச்' திட்டம்


கோவை நகரம் ஸ்மார்ட் சிட்டி நகரமாக மாற்றும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 'ஸ்மார்ட் பென்ச்' என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு மாதிரி திட்டத்தை செயல்படுத்தினர். இதன் மூலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பலர் தற்போது இந்த ஸ்மார்ட் பென்ச்யை பயன்படுத்தி வருகின்றனர்.



கோவை மாநகராட்சியில் வை-ஃபை வசதியுடன் சூரிய ஆற்றலில் இயங்கும் மரம் வடிவத்திலான 'ஸ்மார்ட் பென்ச்' மாநகராட்சி அலுவலகத்தில் முதல் முதலில் அறிமுகப்படுதப்பட்டுள்ளது. இந்த 'ஸ்மார்ட் பென்ச்' மூலம் இலவச வை-ஃபை வசதியும், காற்று மாசுபாட்டினை அளக்கும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மாநகராட்சிகளை மேம்படுத்தும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளதால் கோவையில் பல்வேறு இடங்களில் இந்த வகையான ஸ்மார்ட் பென்ச் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.



இது குறித்து பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கூறுகையில்  "முதல்கட்டமாக மாநகராட்சி முழுவதும் இது போன்ற சுற்றுச்சூழலுக்கு நன்மையான 30 ஸ்மார்ட் ட்ரீ அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தரப்பிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டெல்லியிலுள்ள ஸ்மார்ட் சிட்டி ஆணையமும் இத்திட்டத்தைப் பாராட்டியுள்ளது" எனக் கூறினார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...