மது பழக்கத்தில் இருந்து விடுபட கேஎம்சிஎச் மருத்துவமனையில் புதிய நவீன மருத்துவம்

இந்தியாவில் முதன் முறையாக கேஎம்சிஎச் மருத்துவமனையின் மருத்துவர்கள் மின்முனை இணைக்கப்பட்ட ஒரு பேஸ் மேக்கரை மூளையின் ஆழ்ந்த பகுதிகளுடன் தொடர்புகொள்ள பொருத்தினார்கள். இதற்கு ஆழ் மூளை தூண்டுதல் என்று பெயர். நடுக்குவாதம் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கும், சிலவகையான வலிப்பு நோய்கள் மற்றும் பொதுவான நரம்பியல் இயக்கக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இந்த சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த 55 வயது நபர் 2013 ஆம் ஆண்டிலிருந்தே மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அதில் இருந்து மீள்வதற்கு கோவை கேஎம்சிஎச் மருத்துவமனை வந்த அவரை மருத்துவர் அருள் செல்வன் பரிசோதனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, அவருக்கு புதிய நவீன முறையிலான சிகிச்சையை மேற்கொள்ள கேஎம்சிஎச் மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, நோயாளியின் மூளையில் ஆழ்ந்த பகுதியில் ஒரு மிகச்சிறிய மின்முனை இணைக்கப்பட்ட ஒரு பேஷ் மேக்கர் பொருத்தப்பட்டது. இந்த பேஸ்மேக்கரிலிருந்து தொடர்ந்து மின்சார சமிக்ஞைக்கள் அனுப்பப்படுகின்றன. இதனால், அவர் முற்றிலும் குணமடைந்தார்.



இதுகுறித்து, கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் நல்ல ஜி. பழனிசாமி கூறுகையில், புதுமையான மற்றும் புதிய சிகிக்சை முறைகளை மேற்கொள்வதிலும், அவற்றின் பயன்களை நிரூபிப்பதிலும் கேஎம்சிஎச் மருத்துவமனை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிறந்த மருத்துவ தொழில்நுட்பமும் நவீன வசதிகளும் இருக்கின்றன. நோயாளி மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...