கோவை மாநகராட்சி, (GIZ) என்கிற ஜெர்மன் அரசு நிறுவனம் இணைந்து நகர்புற போக்குவரத்து குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சியுடன் (GIZ) என்கிற ஜெர்மன் அரசு நிறுவனம் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகர்புற போக்குவரத்து மேம்படுத்துவது குறித்த முதற்கட்ட கலந்தாலோசனைக் கூட்டம் இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் தமிழக அரசு சிறப்பு செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆர்.ஜெயா தலைமையில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டம் இந்திய அரசு - ஜெர்மன் அரசு நிறுவனம் (GIZ) இணைந்து தமிழ் நாட்டில் கோவையிலும், ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரிலும், கேரள மாநிலத்தில் கொச்சினிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அதனடிப்படையில் நகர்புற போக்குவரத்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து நடைபெறும் முதற்கட்ட கலந்தாலோசனை கூட்டம் ஆகும்.

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகர்புற போக்குவரத்து மேம்படுத்துவது குறித்து பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டது. அவை கோவை மாநகரில் நாளுக்கு நாள் ஏற்படும் வாகன பெருக்கத்தை மனதில் கொண்டு சாலை விரிவாக்கம் - ஸ்மார்ட் சாலைகள் அமைத்தல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

வாகனங்கள் நிறுத்துமிடம், மாசு கட்டுப்பாடு, ஒலி மாசு கட்டுப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. சாலை விபத்துகள் தவிர்ப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதசாரிக்குரிய நடைபாதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், சைக்கிள் பாதை அமைத்தல் ஆகிய தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. இத்திட்ட வரைவு உருவாக்குவதற்கு பணி சார்ந்த துறைகளுடன் நன்கு கலந்தாலோசித்து முடிவெடுக்க தமிழக அரசு சிறப்பு செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆர்.ஜெயா அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. 

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, கோவை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா ஹரி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன், நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, போக்குவரத்துத்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், (GIZ) ஜெர்மன் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...