கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் துணை ஆணையர் ப.காந்திமதி தலைமையில், வாக்காளர் பட்டியலில் 18 வயது முதல் 21 வயதுக்குள் இருக்கின்றவர்களின் பெயர் சேர்த்தல் மற்றும் இறந்தவர்களின் பெயரினை நீக்குவது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வாக்காளர் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் வாக்காளர் பட்டியலில் 31.07.2017 வரை சிறப்பு முகாம் நடத்தி தகுதியான நபர்களை சேர்த்தல் மற்றும் இறந்தவர்களின் பெயரினை நீக்கல் படிவத்தினை வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மூலம் படிவங்கள் பூர்த்தி செய்து பெற தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் 23.07.2017 அன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மண்டல உதவி ஆணையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.