வளர்ச்சி என்னும் பெயரில் இயற்கையை அளிப்பது நியாயமில்லை- சுற்றுச்சூழல் ஆர்வலர்

வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதிக வாகனங்களை இயக்குவதற்கான சாலைகளும், அதன் விரிவாக்கமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்காக, சிறிய வாகனங்களை மட்டும் இயக்கும் வகையில் சாலைகள் அமைப்பதற்கான திட்டங்களை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், இதில் முக்கிய பிரச்சனை இத்திட்டங்கள் அனைத்தும் இயற்கை வளங்களை குறைக்கும் வகையிலேயே அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, உக்கடம் பெரிய குளத்தில் கடந்த ஒருவருடத்திற்கு மன்பு இயற்கையுடன் இருந்த மரங்கள் தற்போது இல்லை. அந்த சாலை சீரமைக்கப்பட்டு பல்வேறு மாற்றங்களுடன் ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதில், நான்கு சக்கர வாகனங்கள் தனியே, இருசக்கர வாகனங்கள் தனியே செல்லும வகையில் உள்ளன.

உக்கடம் மற்றும் ஆத்துப்பலம் சாலையில் இந்த இரண்டு வழித்தட சாலை அமைக்கப்பட்டது போக்குவரத்தை குறைக்க உதவினாலும், இக்குளங்களில் இருந்த பல்லுயிர்களுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தின.

இந்த திட்டத்தினை எதிர்த்து இயற்கை ஆர்வலர்கள் குரல்கொடுத்து வந்த நிலையிலும், மாவட்ட நிர்வாகம் இயற்கை ஆர்வலர்களின் கருத்திற்கேற்ப சில மாறுபட்ட திட்டங்களை செயல்படுத்தியது. அதன்படி வாலாங்குளம், குறிச்சி உள்ளிட்ட குளக்கரைகளில் சாலை அமைக்கும் போது இத்திட்டங்கள் மாறுபாட்டுடன் செயல்படுத்தப்பட்டன.

குறிச்சி குளக்கரையில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய வேலைகள், ஆர்வலர்கள் மத்தியில் ஒரு கவலையை ஏற்படுத்தியுள்ளன. ஈரமான நிலத்தின் மீது கட்டப்பட்ட சாலை, குளத்திற்கு நீர் செல்லும் ஒரு கால்வாய் வழித்தடத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சில தனிநபர்களால் ராஜவாய்க்காலுக்கு நீர் செல்லும் வழித்தடம் அடைபட்டுள்ளது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து பல வாரங்கள் கடந்துவிட்டன. இதனிடையே, சாலை விரிவாக்கத்தால் மேலும் அந்த வாய்க்காலுக்கான வழித்தடம் தடைபட்டுள்ளது.

மழைக்காலத்தின் போது கால்வாய் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் பருவமழை தொடக்கத்தின் போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து வழித்தடங்களையும் சீரமைக்க வேண்டும். இல்லையெனில் மிகப்பெரியளவிலான சேதங்கள் ஏற்படும் என கோவை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்றார் சமூக ஆர்வலர்.

இதுகுறித்து கோவை மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏரிகளை இணைக்கும் அனைத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என்று கூறினார். இது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். கால்வாய்கள் அடையாளம் காணப்பட்டு, ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படும் என அதிகாரி குறிப்பிட்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...