கோவை அடுத்த மருதமலை வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் செவ்வாயன்று மாலை வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர்கள் 4 பேரும் கிட்டுசாமி, சுரேஷ், மாணிக்கம், சிவா தளபதி பேரூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் முயல் வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து முயலை பிடிக்க வைத்திருந்த வலையை பறிமுதல் செய்த வனத் துறையினர் அவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.