நீர் தேங்காத வகையில் தேவையற்ற பொருட்களை அகற்ற மாவட்ட எச்சரிக்கை அறிவுறுத்தல்

பொதுமக்கள் பயன்படாத சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர் தொட்டி, ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், வாளி, பிளாஸ்டிக் தட்டுகள், டயர்கள், திறந்த கிணறு போன்றவற்றினை நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்திட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் ராசக்காப்பாளையம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் ஊஞ்சவேலம்பட்டி, பூசாரிப்பட்டி, கஞ்சம்பட்டி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் திவான்சாப்புதூர் ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் இன்று (18.07.2017) காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை, ஆகிய அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிப்பகுதிகளிலும்; மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் துறை உயர் அலுவலர்கள் மூலம் திடீர் ஆய்வுகளும் மேற்கொள்ளபடுகின்றது. அதன்படி இன்று ஊஞ்சவேலம்பட்டி, பூசாரிப்பட்டி, கஞ்சம்பட்டி, திவான்சாப்புதூர் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப்பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் சுகாதாரத்துறை மட்டுமல்லாது, ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டப்பணிகள், கல்வித்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளுடன் மக்களுடன் சார்புள்ள அனைத்துத்துறைகளும் இணைந்து காய்ச்சலை ஒழிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.



பொது இடங்களில் கொசு உற்பத்தியை ஒழித்து  அதன் மூலம் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் புகை மருந்து மூலம் கொசுக்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடிநீரில்; உற்பத்தியாகும் ஏ.டி.எஸ் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை காய்ச்சி பருகுதல், சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிப்பாதுகாப்பது, வீடுகளில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்வது, போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



மேலும் காய்சசலுக்கான அறிகுறிகள் ஏதும் ஏற்பட்டால் அருகில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும். பொது சுகாதாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மற்றும் உள்ளாட்சி அமைபைச் சார்ந்த உயர் அலுவலர்கள் மாவட்டந்தோறும் குழுக்களாக பிரிக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொண்டு மேற்பார்வை செய்து வருகின்றனர்.

மாவட்டத்திலுள்ள உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காய்ச்சல் நிலைமை நாள்தோறும் கூர்ந்து கண்கானிக்கப்பட்டு வருகின்றது. அனைத்து வகையான காய்சலுக்கும் தேவையான மாத்திரைகள் போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவ மனைகளிலும் இருப்பில் உள்ளன. இது தவிர எந்தப்பகுதிகளிலும் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அந்தப்பகுதியில் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தினை கண்டறிந்து அதனை உடனே முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கபட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, பொதுமக்கள் தங்கள் வீட்டினுள் தண்ணீர் கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். வீட்டினருகே, பயன்படாத சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர் தொட்டி, ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், வாளி, பிளாஸ்டிக் தட்டுகள், டயர்கள், திறந்த கிணறு போன்றவற்றினை நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி சுகாதாரத்தினை பேணிக்காக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.ந.ஹரிஹரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

பின்னர், கஞ்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மருத்துவ முகாமினையும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டார்.

இவ்வாய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், உதவி பயிற்சி ஆட்சியர் சரண்யாஹரி மற்றும் சுகாதாரம், உள்ளாட்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...