அரசை குறை கூறுவதாக கூறி கமலஹாசனின் உருவப்படம் எரிப்பு

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டது என்று நடிகர் கமலஹாசன் கூறியதையடுத்து தமிழக அமைச்சர்களும் பல்வேறு அமைப்பினரும் கமலஹாசனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.



இந்த நிலையில், தமிழக அரசை ஆதாரமில்லாமல் குறை கூறும் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும், தமிழக கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் வெளியாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டியும் கோவையில் சக்தி சேனா அமைப்பினர் கமலஹாசனின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சக்தி சேனா அமைப்பைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கமலஹாசனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

தொடர்ந்து, அந்த அமைப்பின் மாநில பொது செயலாளர் ஜெகதீசனார் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இந்து மதத்தை பற்றியும் தமிழக அரசு குறித்தும் குறை கூறிவரும் நடிகர் கமலஹாசன் சுய ஒழுக்கம் இல்லாதவர். 'லிவிங் டூ கெதர்' என்கிற கலாச்சாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாழ்க்கை முறையில் வாழும் கமலஹாசன் அரசாங்கத்தை குறை கூறுவதை ஏற்க முடியாது. 

ஆதாரமில்லாமல் குறை பேசிவரும் கமலஹாசனை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும், தமிழக பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பாதிக்கும் வகையில் கமலஹாசன் நடத்தி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்' என்றார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...