எரிசக்தி தணிக்கை மற்றும் எரிசக்தி சேமிப்பினை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகளுக்காக மின்சாரம், நிலக்கரி, விறகுகள், டீசல், ரிபர்னஸ் ஆயில் போன்ற எரிபொருட்களை அன்றாடம் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றன. எரிபொருட்களின் இயற்கை வள ஆதாரங்கள் குறைந்து கொண்டே வருவதாலும், தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாலும், தற்போது எரிபொருள் சேமிப்பு என்பது தவிர்க்க இயலாத நடவடிக்கை ஆகும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் எரிசக்தி பயன்பாட்டு திறனை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு, தமிழக அரசு சிறப்புத் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் எரிபொருள் தணிக்கையினை செயல்படுத்தி, எரிபொருள் ஆற்றலினை சேமிக்கும் நடவடிக்கையினை ஊக்கப்படுத்தும் வகையில் 20.07.2017 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருநாள் கருத்தரங்கம் கோவை, டவுன்ஹாலில் உள்ள மாவட்ட தொழில் மைய கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கருத்தரங்கில் எரிபொருள் ஆற்றல் தணிக்கை தொடர்பான தொழில்நுட்பங்கள், ஆற்றல் சேமிப்பு நடவடிக்கை தொடர்பான விவரங்கள் தேசிய உற்பத்தி திறன் குழு, பெட்ரோலியம் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய சிறு தொழில் வளர்ச்சி வங்கி சார்ந்த வல்லுநர்களால் விளக்கப்படவுள்ளது. எரிசக்தி ஆற்றல் தணிக்கை மற்றும் உபகரணங்கள் வாங்கி நிறுவுதல் தொடர்பாக தமிழக அரசு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்தும் இக்கருத்தரங்கில் எடுத்துரைக்கப்படும்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தின் போது முன்னுரிமை அடிப்படையில் சுமார் 50 பங்கேற்பாளர்களுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்படும். மேலும், பல்வகை தொழிற்சாலைகளின் சிறப்பு நேர்வுகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, தொழில் நிறுவனங்கள் எரிசக்தி ஆற்றல் தணிக்கை மற்றும் சேமிப்பு தொடர்பான நுட்பங்களைப் பெற்று, தமது பொருட்களின் உற்பத்தி செலவினை குறைத்து, சந்தை போட்டிகளில் நிலைத்து நின்று, வாகை சூட வருமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.