கோதபாளையத்தில் செயல்பட்டு வந்த சிறப்பு பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்- மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தினர் மனு

கோதபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த சிறப்பு பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் கோதபாளையம் திருப்பூர் காதுகேளாதோர் சிறப்பு பள்ளி தாளாளர் முருகசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் சுமத்தபட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த பள்ளியில் சுமார் 110ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனால் அப்பள்ளியில் படித்து வந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில் பள்ளியை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்ற வலியுறுத்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து கோவை மாவட்ட செயலாளர் புனிதா கூறுகையில், 40 சதவிகிதம் உடல் குறைபாடு இருப்பின் அவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அமல்படுத்திய சட்டத்தை தற்போதைய அரசு செயல்படுத்த காலம் தாழ்த்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ் பெற அலைக்கழிக்கபடுகின்றனர். பிற மாவட்டங்களில் உள்ளது போல குறை தீர்க்கும் கூட்டங்களின் போது மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து அடையாள சான்றிதழ் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்வதுடன் உடனடியாக கண்காணிப்புக் குழு மற்றும் மையங்கள் அமைக்க வேண்டும்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...