கோவையில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெகு காய்ச்சலுக்கான சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாக நிலவேம்பு கஷாயம் உள்ளது. தற்போது நிலவேம்பு கஷாயம் பொதுமக்களுக்கு வழங்குவது கோவையில் ஒருசில பகுதிகளில் துவங்கியுள்ளது.

உக்கடம் தெற்கு பகுதியில் உள்ள பிலால் நகர், பொன்விழா நகர், அண்ணா நகர், ரோஸ் கார்டன், சாராமேடு மற்றும் கரும்புக்கடை போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற சங்கம் சார்பில் 86-வது வார்டின் முன்னாள் கவுன்சிலர் சாதிக் அலி தலைமையில் வழங்கப்பட்டது.

பருவமழைக் காலங்களில், சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்டவயின் அடிப்படையில் பரவும் இதுபோன்ற நோய்களை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மாவட்ட நிர்வாகம், சுகாதாரம் உள்ளிட்ட அந்தந்தந்த உள்ளாட்சித்துறை பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கோவை மாவட்டத்தில் பரவலாக பெருகி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.