பூரண மதுவிலக்கு கோரி காங்கிரஸ் சார்பில் கோவையில் உண்ணாவிரதம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் செயல்பட்டு வந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.



இதனைத்தொடர்ந்து, மூடப்பட்ட இந்த டாஸ்மாக் கடைகளை குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் திறக்க மதுபானக் கடை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதில் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி மற்றும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிமன்ற தீர்ப்பை மதித்து மதுபானக் கடைகளை மூடவேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கோவை சிவானந்த காலணியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து குமரி அனந்தன் கூறுகையில், மதுவால் பல குடும்பங்கள் சீரழந்துள்ளது. பூரண மதுவிலக்கை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம்" என தெரிவித்தார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...