கோவை மாநகராட்சியில் 513 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல், ரூ.76,550 அபராதம்

கோவை மாநகராட்சியில் மே மாதம் 1-ம் தேதி முதல் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த 08.07.2017 முதல் 14.07.2017 வரை 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 684 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் மொத்தம் 513 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இன்று (14.07.2017) பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் ரூ.76,550 விதிக்கப்பட்டது.

இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், “பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதி 2016 அறிவிப்பின்படி மாநகராட்சியின் சுற்றுபுறசூழலைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் அழகினை பராமரிக்கவும், பாதுகாக்கவும், 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள் ஆகியவைகளை கோவை மாநகராட்சிப் பகுதியில் உற்பத்தி செய்யவும், உபயோகிக்கவும், விற்பனை செய்யவும், கையிருப்புகள் வைத்திருக்கவும் 2017 மே மாதம் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.

மேலும், அவற்றை கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கும், உபயோகிப்பாளர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த 08.07.2017 முதல் இன்று 14.07.2017 வரை கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் ஆய்வு மேற்கொண்டதில் மொத்தம் 684 கடைகளில் 513 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் இன்று பறிமுதல் செய்யப்பட்டு, அபராதத் தொகையாக ரூ.76,550 விதிக்கப்பட்டது.

மேலும், இந்த ஆய்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், சிறு மற்றும் பெரு வியாபாரிகள் மாநகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...