ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ஏரிகள் புனரமைக்கும் பணி குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் தலைமையில் விளக்க கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் 8 ஏரிகள் புனரமைக்கும் பணி குறித்த இடைநிலை அறிக்கை பற்றிய விளக்ககூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் புனரமைப்பு பணிக்கான மேற்கொள்ளவேண்டிய செயல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருடம் முழுவதும் ஏரியில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். ஏரிகளில் வந்து சேரும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்தல் அவசியம் குறித்து விவாதிக்கப்ட்டது.

எட்டு ஏரிகளையும் இணைக்கும் வகையில் ஒரு மிதி வண்டிப்பாதை அமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏரி முகப்பை அழகுபடுத்தி மேம்பாடு செய்தல், சுற்றுலா தலங்கள் அமைத்து பயன்பாட்டினை மேம்படுத்துதல், பறவை சரணாலயம் அமைத்தல், மரங்கள் வளர்த்து பசுமைப்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இணையாக கோவை மாநகராட்சியில் உள்ள 8 ஏரிகளை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன், நிர்வாக பொறியாளர் சரவணகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அருண்பிரகாஷ், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார் அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...