கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தெய்வானை. இந்த தம்பதியினருக்கு பெண்குழந்தை உள்ளது.
ஏழ்மை காரணமாக முருகன் வீட்டில் கியாஸ் அடுப்பு இல்லை. தெய்வானை விறகு அடுப்பிலேயே சமையல் செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை விறகு அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்த தெய்வானையின் சேலையில் தீப்பிடித்தது. சுதாரித்துக்கொள்ளும் முன்பாக தெய்வானையின் உடல் முழுவதும் தீ பரவியது. இதனால் தெய்வானை கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உடலில் சுமார் 60 சதவிகிதத்திற்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டிருந்த தெய்வானைக்கு மருத்துவமனையில் திவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி தெய்வானை இன்று காலை பறிதாபமாக பலியானார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.