கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சுகாதாரத்தினை மேம்படுத்திட மாநகராட்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் சுகாதாரம் மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-



கோவை மாநகராட்சி சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாநகராட்சியாக பரப்பளவிலும், வளர்ச்சியிலும் என எல்லா வகைகளிலும் பெரிய மாநகராட்சியாக உள்ளது. குடிநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம், மற்றும் மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை விழிப்புடன் மேற்கொண்டு வருகின்றது. முந்தைய ஆண்டுகளைவிட தற்போது பருவமழை குறைவாக பெய்துள்ளதால், தொற்று நோய் பரவாத வகையில் அலுவலர்கள் கவனமாக பணியாற்றிட வேண்டும்.

மேலும், விழிப்புணர்வு பணிகளில் சுகாதாரத்துறை மட்டுமல்லாது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள், சமூக பாதுகாப்புத்துறை, கல்வித்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவை உட்பட மக்களுடன் சார்புள்ள அனைத்துத்துறைகளும் இணைந்து சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்கள் மற்றும் நீர் தேங்கிய மாநகர குடியிறுப்பு பகுதிகளில் கொசு உற்பத்தியினை தடுக்கும் நடவடிக்கையாக புகை மருந்து மூலம் கொசுக்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர்களில் லார்வாக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிப்பாதுகாப்பது, வீடுகளில் மழைநீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்வது, குடிநீரை காய்ச்சி பருகுதல், நீர்பாத்திரங்களில் கொசுக்கள் புகாவண்ணம் மூடி வைத்தல், காய்சசலுக்கான அறிகுறிகள் ஏதும் ஏற்பட்டால் அருகில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகி முறையான சிகிச்சை பெறுதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன.

அனைத்துப் பகுதிகளிலும் காய்ச்சல் நிலைமை நாள்தோறும் கூர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அனைத்து வகையான காய்சலுக்கும் தேவையான மாத்திரைகள் போதிய அளவில் அனைத்து மாநகர சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவ மனைகளிலும் இருப்பில் உள்ளன. இது தவிர எந்தப்பகுதிகளிலும் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அந்தப்பகுதியில் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தினை கண்டறிந்து அதனை உடனே முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கபட்டு வருகின்றன.

மேலும் சுகாதாரப்பணிகளுக்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், அரசால் வழங்கப்படும் மருத்துவ உதவிகள் குறித்தும் மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தேவையான இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தவும், பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவை அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறத்தப்படடுள்ளது. 

இதுபோன்ற நடவடிக்ககைகளின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி முழுசுகாதாரம் பெற்று மாநகராட்சியாக விளங்கும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, மாநகர சுகாதார அலுவலர் சந்தோஷ்குமார். துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி, உதவி ஆணையர்கள் ரவி. அண்ணாத்துறை, சரவணன், ரவிக்குமார் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...