ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக அனுச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் இன்று காலை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

முன்னதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் இப்பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, விழிப்புணர்வு பாதகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்ற மாணவர்கள் பந்தைய சாலை வழியாக சென்று வஉசி மைதானத்தில் பேரணியை நிறைவு செய்தனர்.