கோவை க.க.சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி (49). இவரது மகள் தனலட்சுமி (17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1-ம் தேதி வீட்டில் மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தார். விளக்கில் மண்ணெண்ணெய் தீர்த்துவிட, அதில் மண்ணெண்ணெய் நிரப்பியுள்ளார். அப்போது தவறுதலாக மண்ணெண்ணெய் தனலட்சுமியின் உடல் மீது விழுந்துள்ளது. இதை கவனிக்காத அவர், மண்ணெண்ணெய் விளக்கை கொளுத்தியுள்ளார். அப்போது பரவிய தீ தனலட்சுமியின் உடல் முழுவதுமாக பற்றி எரிந்துள்ளது. தனலட்சுமியின் கூச்சல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உடல் முழுவதும் 56 சதவிகிதத்திற்கும் மேல் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரத்தினசாமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த க.க. சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.