கோயம்புத்தூர் மாநகராட்சியில் 3 மண்டலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் 1.87 சென்ட் மீட்க்கப்பட்டு அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.
மேலும், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர் கிராமம், வார்டு எண்.59, வசந்தா நகர் பகுதியில் உள்ள 67 சென்ட் பரப்பும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, வடவள்ளி கிராமம், வார்டு எண்.17, ஸ்ரீ பண்ணாரி அம்மன் பகுதியில் உள்ள பூங்கா 40 சென்ட் பரப்பு மற்றும் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி கிராமம், வார்டு எண்.28 போஸ் கார்டன் பகுதியில் உள்ள 80 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 187 சென்ட் அல்லது 1.87 ஏக்கர் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு பகுதிகள் சுத்தம் செய்து, பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமையும் பொது ஒதுக்கீடு சம்பந்தமாக, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் அடிப்படையில் நகரமைப்பு பிரிவில் பணிகள் மேறக்கொள்ளப்பட்டு வருகிறது.