கோவை செட்டிபாளையத்தில் கரி மோட்டர் ஸ்பீட் வே ஜே.கே.டயர் சார்பில் கார் பந்தயப் போட்டி மற்றும் சுசூகி சிக்சர் கப் இரு சக்கர வாகன போட்டிகள் நாளை நடைபெறுகிறது. இதன் தகுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது. யூரோ ஜே.கே.போட்டியில் 12 பேர் தகுதி சுற்றில் கலந்து கொள்கின்றனர். எல்.ஜி.பி பார்முலா 4 தகுதி சுற்று கார் பந்தையத்தில் 20 பேரும் சுசூகி சிக்சர் இரு சக்கர வாகன தகுதி சுற்றுப் போட்டியில் 22 பேரும் ரெட் புல் ரூக்கி கப் போட்டியில் 15 பேரும் இன்று பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.