கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக கோவையில் புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்- கைது

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் 12 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாய்களை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கதிராமங்கலம் பகுதியில் குழாய்களில் இரு நாட்களுக்கு முன்பு எண்ணெய் கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து அதில் தீபற்றியும் எரியத்துவங்கியது.

இதனால் ஆவேசமடைந்த மக்கள் உடனடியாக கதிராமங்கலத்தில் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி-யின் குழாய்களை அகற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் மக்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து பொதுமக்களின் மீது காவல்துறையினரால் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், சிலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



அதன்படி, இன்று கோவை மாவட்ட தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், ஓஎன்ஜிசி குழாய்களை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த கண்மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு பணத்திற்காகவும், பதவிக்காகவும் மத்திய அரசிடம் பணிந்து செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில் மத்திய அரசு மக்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும். எதை பயன்படுத்த வேண்டும் என அனைத்து அடிப்படை உரிமைகளையும் பறித்து வருகிறது. மத்திய அரசின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.



கதிராமங்கலம் மக்கள் மீது காவல்துறையினரைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தமிழக அரசே. கதிராமங்கலத்தில் போராடிய ஜெயராமன் போன்றோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் அனைத்தையும் நீக்க வேண்டும்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...