மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வரும் மக்கள் தரையில் அமர வேண்டிய அவலம்

வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த நாளில், பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக அளித்து வருகின்றனர். இதனால், திங்கட்கிழமைகளில் எப்போதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பகவே காணப்படுகிறது.



பாலூட்டும் அறை:-

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பச்சிளங்குழந்தைகளுடன் மனு அளிக்கவரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்குக் கூட ஒதுக்குப்புறமாக ஓர் இடம் இல்லாமல் தவித்து வருவதாக சமீபத்தில் 'சிம்ப்ளிசிட்டி' -யில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. 



புதிய ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டும், இதுவரை பாலூட்டும் அறை அமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

இந்த நிலையில், குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரளான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் எதுவும் இல்லாமல் தரையில் வெகு நேரம் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டது.



தண்ணீர் வசதி, வீடு, பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி வருவோரை இப்படி தரையில் அமர்த்தி காத்திருக்கச்செய்வது முறையோ என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...