குன்னூரில் கன மழை - விவசாயம் அதிகரிக்கும் என மக்கள் மகிழ்ச்சி

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகை, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை தொடக்கத்தின் காரணமாக பரவலாக இரவு, பகல் என மழை பெய்து வருகிறது. 

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பகலில் மழை பெய்யத் துவங்கியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதுகுறித்து, குன்னூர் பகுதிவாசி ரவி என்பவர் கூறுகையில், குன்னூருக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் அதிகப்படியாக காய்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது பெய்யும் பருவமழை விவசாயம் செழிக்க மிகவும் அவசியமாகும். மழையின் காரணமாக விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து காணப்பட்டது. ஆனால், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...