கோவை மாவட்டம், அன்னூர் தாலுகா பொகலூர் கிராம ஆனைபள்ளி பகுதியைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். அந்த மனுவில், பொகலூர் கிராமம் க.ச.எண் 247/2A கொண்ட அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. இவ்விடத்தை தனியார் ஒருவர் ஆக்கரமித்து விற்பனை செய்து வருகிறார்.
மேலும், தாங்கள் இப்பகுதியில் பல வருடங்களாக வசித்து, கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே, தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை மீட்டு தங்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு ஆனைபள்ளி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.