விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் கோவையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாராத்தான் போட்டி நடைபெற்றது.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான உடல்நலம் காத்திட வேண்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவையில் தனியார் கல்லூரி, பல்வேறு அமைப்புகள் சார்பாக 10 வயதிற்கு மேற்படோருக்கான மாராத்தான் போட்டி நடைபெற்றது. 15, 10 மற்றும் 5 கி்.மீ என 3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் துவங்கி ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை வழியாக மைதானத்தை வந்தடைந்தனர்.

இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினர்களும் கலந்து கொண்டனர். இறுதியில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.