இராணுவத்தில் பணியாற்றி ஓய்வூதியத்துடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மறுவேலைவாய்ப்பு அடிப்படையில் குடிமைப்பணியில் வேலைவாய்ப்பு பெற்று குடிமைப் பணிக்கான ஓய்வூதியம் பெற்று உயிர்நீத்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் படைவிரர்களின் கைம்பெண்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு இராணுவ குடும்ப ஓய்வூதியத்துடன் குடிமைப்பணியில் பணியாற்றியமைக்கான குடும்ப ஓய்வூதியமும் வழங்கிட தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டள்ளது.
2013 ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு, குடிமைப்பணியில் மறுவேலைவாய்ப்பு பெற்று பணிபுரிந்து ஓய்வுபெற்ற பின்பு ஓய்வூதியம் பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களுக்கு இது பொருந்தும்.
எனவே, கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த குடிமைப்பணியில் ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்கள் இவ்வரசாணையின்படி முன்னாள் படைவீரர்கள் பணியாற்றிய குடிமைப்பணி துறையினை அணுகி குடும்ப ஓய்வூதியம் குறித்தான கருத்துருவினை மாநில கணக்காயருக்கு பரிந்துரை செய்து பயனடையலாம்.
இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர், 0422- 2214107 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது நேரில் தொடர்புகொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.