கோவை மாவட்டம், வைசியால் வீதியில் சேலத்தை சேர்ந்த சண்முகராஜன் என்பவர் வெள்ளி பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இன்று அங்கு வந்த சில மர்ம நபர்கள் சண்முகராஜன் மீது மிளகாய் பொடியினை வீசியுள்ளனர்.
இதனால், சண்முகராஜன் நிலைதடுமாறிய நிலையில் அந்த மர்ம நபர்கள் அவரது கையில் இருந்த வெள்ளி கட்டிகள், வெள்ளி கொலுசுகள் மற்றும் 92 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகினர்.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ராஜவீதி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடு போன 92 ஆயிரம் பணம் உட்பட வெள்ளி பொருட்களின் மதிப்பு 4 லட்சம் ரூபாய் ஆகும்.