இந்தியாவில் முதல் முறையாக ஏர் ஆம்புலன்ஸ் சேவை கோவை கங்கா மருத்துவமனையில் அறிமுகம்


இந்தியாவில் முதல் முறையாக ஏர் ஆம்புலன்ஸ் சேவை கோவையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் துவங்குகிறது எனவும் ஒரு முறை பயன்பாட்டிற்கு 1.25 லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என கங்கா மருத்துவமனை இயக்குனர் டாக்டர்.ராஜசேகர் தெரிவித்தார்.



கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான கங்கா மருத்துவமனை சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை வரும் 25-ம் தேதி துவங்குகிறது. இது தொடர்பாக அந்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர்.ராஜசேகர் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் மருத்துவத்திற்காக துவங்கப்படும் முதல் ஏர் ஆம்புலன்ஸ் சேவை இது. கங்கா மருத்துவமனைக்கு என இல்லாமல் அனைத்து தனியார் மருத்துவமனைக்கும் பயன்படும் வகையில் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவை இருக்கும். விபத்தின் போது காயமடைபவர்களை சீக்கிரமாக மருத்துவமனைக்கு கொண்டு வரவும், இருதய நோயாளிகள், உடல் உறுப்பு தானம் போன்றவற்றிக்கு இந்த சேவை பயன்படும். இந்த ஏர் ஆம்புலன்ஸில் 2 விமானிகள் 1 நோயாளி 1 மருத்துவர், 1 நோயாளியின் உறவினர் பயணிக்கலாம்.



மேலும், விமான போக்குவரத்து துறை அனுமதியுடன் ஹெலிப்பேடு அமைக்கப்பட்டு இருக்கிறது. நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் இந்த ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்களில் இருந்து இரவு நேரத்திலும் சேவை தொடர அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. 



இரண்டு விமானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்கு 1 மணி நேரத்திற்கு 1.25 லட்சம் வரை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" என டாக்டர்.ராஜசேகரன் தெரிவித்தார்.

ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 440 கீ.மீ தூரம் வரை பயணிக்க முடியும். மலைகள் சூழ்ந்த பகுதியாக இருந்தாலும் இந்த ஹெலிகாப்டர் மூலம் பயணிக்க முடியும். மேகமூட்டத்திலும் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவையினை தொடர முடியும்" என விமானி பட்டாசாரியா தெரிவித்தார். மேலும், இந்த ஆம்புலன்ஸ் சேவை மூலம் கோவையை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பயன்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கங்கா மருத்துவமனை தலைவர் டாக்டர். சண்முகநாதன், டாக்டர். ராஜசபாபதி, டாக்டர். ராஜசேகர், டாக்டர். ராஜா பாஸ்கர் மற்றும் மண்டல திட்ட அதிகாரி காயத்திரி அனத்தகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...