ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவையில் காற்று மாசுபடுவதை கண்காணிக்க 30 இடங்களில் நவீன கருவிகள்


கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி நகரமாக மாற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக மாநகராட்சி சார்பில் கோவையில் காற்று மாசுபடுவதை கண்காணிக்க 30 இடங்களில் நவீன கருவிகள் அமைக்கப்படுகிறது.



மத்திய அரசு கடந்த 2015–ம் ஆண்டு ஜூன் 25–ந் தேதி இந்தியாவில் 60 நகரங்கள் திறன்மிகு நகரங்களாக (ஸ்மார்ட் சிட்டி) தேர்ந்தெடுத்து அறிவித்தது. அதில் கோவை மாநகரமும் ஒன்று. மத்திய அரசு திறன்மிகு நகரங்களை தேர்ந்தெடுத்து வருகிற ஜூன் 25ம் தேதியோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்தியா முழுவதும் உள்ள 60 திறன்மிகு நகரங்களில் அதன் திட்டங்களை டெல்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க உள்ளார்.

அதன்படி கோவையில் இலவச வை-ஃபை வசதியுடன் சூரிய ஆற்றலில் இயங்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' திட்டம், 'சிட்டிசன்ஸ் ஆப்', போன்ற திட்டங்கள் அறிமுக்கப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டங்களில் ஒன்றான காற்று மாசுபடுவதை கண்காணிக்கும் கருவிகளின் செயல்பாடுகள் கோவையில் 30 இடங்களில் தொடங்கி வைக்கப்படுகிறது. இதன் முதற்கட்ட ஆய்விற்காக இந்த காற்று மாசுபடுவதை கண்காணிக்கும் கருவி அதிக அளவில் வாகனம் வந்து செல்லும் பகுதியான உக்கடம் பெரிய குளம் பகுதி, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், கணபதி உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இக்கருவி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கோவையில் முக்கிய 30 இடங்களில் வரும் ஜூன் 25ம் தேதிக்குள் அமல்படுத்தப்படும்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி கூறுகையில்:- கோவை மாநகரில் முக்கிய சிக்னல் சந்திப்புகளான ஹோப் காலேஜ், உக்கடம் பஸ் நிலையம் முன்பு, லட்சுமி மில் சந்திப்பு உள்பட 30 இடங்களில் இந்த கருவி அமைக்கப்படுகிறது.

சிக்னல் சந்திப்புகளில் இந்த கருவியை வைக்கப்படுவதால், வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, கந்தகம் போன்ற நச்சு வாயுக்கள் எந்த அளவு காற்றில் கலந்துள்ளன? என்பதை இந்த கருவி கண்டறியும்.

கோவை நகரில் காற்று இரண்டு முறைகளில் மாசுபடுகிறது. ஒன்று வாகனங்கள் விடும் நச்சு வாயுக்கள் மூலம், அடுத்து தொழிற்சாலைகள் விடும் நச்சுவாயுக்கள். கோவையில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. இதனால் வாகனங்களின் புகை மூலமே காற்று மாசுபடுகிறது. இதை அளவிடுவதற்காக தான் இத்தகைய கருவிகள் பொருத்தப்படுகின்றன.

நச்சு வாயுக்களால் காற்று மாசுபடுவதை தடுப்பதற்கு ஒரே வழி தாவரங்களை அதிக அளவில் வளர்ப்பது தான். அதன்படி சாலையோரம் அதிக செடிகள் வளர்க்க முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் கோவை நகரில் உள்ள சாலைகள் குறுகலாக இருப்பதால் அதில் செடிகள் வளர்ப்பது என்பது இயலாத காரியம். எனவே எங்கெல்லாம் இடங்கள் மற்றும் வாய்ப்பு உள்ளதோ அந்த இடங்களில் செடிகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது சிறிய பூந்தொட்டிகளில் நச்சு வாயுக்களை அதிகம் உறிஞ்சி மனிதனுக்கு தேவையான ஆக்சிஜனை வெளிவிடும் சிறிய தாவரங்கள் வளர்க்கப்படும். இந்த செடிகள் வாகனங்கள் வெளிவிடும் நச்சுவாயுக்களை உறிஞ்சும்போது அந்த இடத்தில் காற்று மாசுபடுவது குறையும்" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...