கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி துவக்கம்!

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை காப்பாற்றும் வகையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்களால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.



இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த 18 வாரங்களாக கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்களில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இந்த அமைப்பினர் இன்று 19-வது வாரமாக தமிழர்களின் நீர் மேலாண்மைக்கும் கட்டிட கலைக்கும் முன்னுதாரணமாக இருக்கும் ஆழி கிணற்றை மீட்கும் களப்பணி மற்றும் பசுமையை உருவாக்கும் முயற்சியின் தொடக்கமாக விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.



இன்று கோவை சுண்டக்காமுத்துர் பகுதியிலுள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கிணறு தூய்மை படுத்தும் பணியில் 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டனர். கலப்பணியின் போது 7 அடி ஆழமுள்ள மண் அகற்றப்பட்டது.



மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மரங்களின் பரப்பளவு குறைந்துள்ளதால் மழையளவு குறைந்துள்ளது. எனவே மழையளவை அதிகரித்து நீர் வளங்களை மீட்கும் வகையில் மரங்களின் பரப்பளவை அதிகரிக்க களப்பணி முடிந்தவுடன் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதில் 5000 விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டன.



இதனிடையே, குனியமுத்தூர் செங்குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு குளத்திற்கு கரை அமைக்கும் பணியில் இன்று நான்கு  ஜே.சி.பி இயந்திரங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த பணியானது செங்குளம் தன்னார்வலர்கள் உதவியுடன் நடைபெற்று வருகிறது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...