கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(60). ஓய்வு பெற்ற சப்-கலெக்டரான இவர் கடந்த 14ம் தேதி கேரளாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு தனது குடும்பத்துடன் சென்றார். நிகழ்ச்சி முடிந்த பின்னர், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரன் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 18 பவுன் மதிப்புள்ள தங்க சங்கிலிகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, சந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்படாததால் அருகில் இருப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்ததில் ஒரு கைரேகை கண்டெடுக்கப்பட்டது. இந்த கைரேகையை பிற குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகின்றன.