கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களுக்கும் தமிழ்நாடு அடிப்படைப் பணியில் பெருக்குபவர், துப்புரவுப் பணியாளர் மற்றும் இரவுக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வெளி முகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அளித்திட மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரரை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அரசு விதிப்படி பதிவு செய்யப்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற தகுதி வாய்ந்த ஏஜென்சியினர் முத்திரையிடப்பட்ட உறையில் உரிய விண்ணப்பத்தினை முகமை அங்கீகார நகல், விலைப் புள்ளி விபரங்களுடன் "அடிப்படை பணி வெளிமுகமை ஒப்பந்ததாரர் நியமனத்திற்கான ஒப்பந்தப்புள்ளி" என்று உறையின் வெளிப்புறம் தெளிவாகக் குறிப்பிட்டு 28.6.2017-ஆம் அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்த புள்ளி விபரத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் அறையில் வைக்கப்பட்டுள்ள முத்திரையிடப்பட்ட பெட்டியில் சேர்க்கப்பட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.