உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவையில் இரத்ததான விழிப்புணர்வு பேரணி


கோவை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு மையம் சார்பில் இன்று (ஜூன் 15) இரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ம் தேதி இரத்த கொடையாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் நேற்று (ஜூன் 14) கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 116 பேர் இரத்த தானம் செய்தனர். இதுபோன்று பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி தங்கள் உடல் ஆரோக்கியத்தை பொருத்து இரத்த தானம் செய்ய இன்று பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதி வழியாக பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் விதமாக ஒவ்வொருவரும் இரத்ததானம் செய்ய  வேண்டும், இரத்ததானத்தின் அவசியம் போன்றவையும், இரத்ததானம் செய்வீர்! உயிர் காப்பீர்! பிறரின் இறப்பிற்கு கண்ணீர் கொடு! பிறரின் கண்ணீருக்கு இரத்தம் கொடு! என்ற இரத்த தானம் குறித்த விளம்பர பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இரத்த தானம் செய்வது பிறர் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலம் மேம்படுவதற்கும் உதவும். இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்டுவதற்குச் சமம். தற்போதைய ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்ததானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு, மேலும் ஹிமோகுளோபின் அளவினை கட்டுபடுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்ததானம் பயன்படுகிறது. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் சென்ற விழிப்புணர்வு பேரணியானது, இரயில் நிலையம் வழியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை சென்று நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பி.ஜி.பானுமதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பானுமதி, கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி முதல்வர் சுவாமிநாதன், குடும்ப நல துணை இயக்குநர் கிருஷ்ணா, இரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் மங்கையர்கரசி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சேரலாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...