பயிற்சி வகுப்பு நடத்த முறையான திட்டமிடல் இல்லை என்று கோவை அரசு மருத்துவமனை முன்பு உதவி மருத்துவர்கள் தர்ணா

பயிற்சி வகுப்புக்கு முறையான திட்டமிடல் இல்லாமல் தங்களை சிரமப்படுத்துவதாகக் கூறி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பயிற்சி வகுப்புகளை புறக்கணித்து கோவை அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.



108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உதவி மருத்துவர்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை புத்துணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு இன்றும், நாளையும் பயிற்சி வகுப்பு நடத்த கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவித்திருந்த பயிற்சி வகுப்பு மதியம் வரையில் தொடங்கப்படவில்லை. இதனால், இந்த பயிற்சி வகுப்புக்கு வந்திருந்த 60-க்கும் மேற்பட்டோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும், மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு தங்கும் இடத்தை கூட ஏற்பாடு செய்து தரவில்லை என்றும், போதிய அடிப்படை வசதிகள் கூட செய்து தராததால் பெண் உதவி மருத்துவர்கள் அவதியுற்றனர் என்றும் கூறி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ரயில்நிலையம் அருகே உள்ள தாமஸ் கிளப்-யில் அவர்களுக்கான பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த தர்ணா போராட்டத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...