வெஸ்டர்ன் கார்ட்ஸ் பள்ளியில் ‘உலக குருதி கொடையாளர் தினம்’ கொண்டாடப்பட்டது

கோவை வெஸ்டர்ன் கார்ட்ஸ் பள்ளியில் ‘உலக குருதி கொடையாளர் தினம்’ இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.



பள்ளிச் செயலாளர் சசிக்குமார் சாம்ராஜ் தலைமை வகித்தார். கோவை மாவட்ட ‘இந்திய மருத்துவ அமைப்பின்’(IMA) இரத்த வங்கியின் ஆலோசகர் டாக்டர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆகிலா பிர்தோஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் காணொலி மூலம் மாணக்கருக்கு இரத்த வகைகள், மனித இரத்தத்தின் முக்கியத்துவம், இரத்தம் கொடை அளிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்து விளக்கிக் கூறினார். 

‘இரத்த தானம் செய்வோம்’ என்ற வாசகத்தை மாணக்கர் அமைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கோவையில் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இரத்தம் நன்கொடை அளிக்க ஏதுவாக பள்ளி பெற்றோர்களின் இரத்த வகைகள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் மாணக்கர் தங்கள் பெற்றோர்களுக்கு இரத்த தானத்தின் அவசியத்தை எடுத்துக் கூறி இரத்த தானம் செய்ய வைப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆக்னஸ் பிரியா நன்றியுறை கூறினார்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...