சேலம் ரயில்நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளுடன் கூடிய கழிவறைகள் திறப்பு

ரயில்நிலையங்களை பயணிகளுக்கு குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் உதவும் வகையில் மேம்படுத்த தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைளின் ஒரு பகுதியாக, இன்று (14.06.2017) காலை சேலம் ரயில்நிலையத்தின் 3-4 நடைமேடைகளில் சீர் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதியுடன் கூடிய கழிப்பறைகளை சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு சந்திரபால் அவர்கள், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திரு. விஜுவின், கோட்டப் பொறியாளர் திரு எம்.மாரியப்பன், உதவி வணிகமேலாளர் திரு எம்.ஷாஜஹான், சேலம் ரவுண்ட் டேபிள் 28 அமைப்பை சேர்ந்த திரு.சுப்பு, திரு.கமலேஷ், திரு, கார்த்திக்  மற்றும் இதர ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் முன்னிலையில் மாற்றுத்திறன் பயணிகளின் உபயோகத்திற்காக திறந்து வைத்தார். 



சேலத்தில் உள்ள 28 ரவுண்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்புக் கழிப்பறை மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தங்களது வீல் சேர்களில் அமர்ந்து கொண்டு உள்ளே செல்ல வசதியாக இரு புறங்களிலும் கைப்பிடிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 



நிகழ்ச்சியில் பேசுகையில் திரு.சந்திரபால் அவர்கள் தெற்கு ரயில்வேயுடன் கை கோர்த்து மாண்புமிகு இந்தியப் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்நிலையங்களில் இத்தகு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முன்வந்ததற்கு ரவுண்ட் டேபிள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். 



ரவுண்ட் டேபிள் அமைப்பின் திரு.சுப்பு பேசுகையில் சேலம் ரயில் நிலையத்தில் கழிவறைகள் 6.5 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்திய ரயில்வேயுடன் இணைந்து இது போன்ற மேலும் பல மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். திரு விஜுவின் பேசுகையில் ரயில் பயணிகள் ரயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...