நாலிங்கம் மலர் இளஞ்சிவப்பு வண்ணமும், சிவப்பு வண்ணமும் கலந்து மாறுபட்ட தோற்றம் கொண்டதாகும். இவற்றின் மகரந்தத் தூவிகள் படமெடுத்து ஆடும் பாம்பு போல் வித்தியாசமாக இருக்கும்.
நீலகிரி மலைப் பகுதிக்கு ஆங்கிலேயர்களால் இந்த மரம் அறிமுகப்படுத்தப்பட்டது. மிதமான தட்பவெப்ப நிலையில் வளரும் தன்மை கொண்ட இந்த மரங்கள், நீலகிரி மாவட்டம் பர்லியாறு, பொக்காபுரம் பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றன.
குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையோரம் அரசு பேருந்து உணவகம் எதிரிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தற்போது ஏராளமான மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால் இவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பதுடன் புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.