சர்வதேச குழந்தை தொழில்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச குழந்தை தொழில்முறை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சிசயர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்து, பத்தாம் மற்றும் பன்ணிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்க்ளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார். 



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்து, குழந்தை தொழிலாளர் குழந்தை தொழிலாளர் திட்டத்தில் பயின்று பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், சர்வதேச குழந்தைத் தொழில் முறை எதிர்ப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - 12 ஆம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் குழந்தைத் தொழிலாளர் திருத்த சட்டம் 2016-ன் படி குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினரை பணியில் அமர்த்தக் கூடாது என்பதை வலியுறுத்தி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் குழந்தை தொழில்முறை ஒழிப்பு திட்டம் இணைந்து செயல்பட்டு வருகின்றது.



14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் எந்த வித பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது. 18  வயதிற்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்ற மத்திய அரசின் சட்டம் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து பொதுமக்கள் கூடும் இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேசிய குழந்தைகள் தொழிலாளர் திட்டம், தொழிலாளர் துறை,  தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம், கல்வித்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மற்றும்  தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், தொழில் வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், பேக்கரி, கடைகள், தொழிற்சாலைகள், பவுண்டரி, செங்கல் சூளைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த விதப் பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டோம் என்றும், 18 வயதிற்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்த மாட்டோம் என்றும் 30,000 உறுதிமொழி படிவங்கள் நிறுவன உரிமையாளர்களிடம் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரிமா சங்கங்களுடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கவிரை, கட்டுரை, ஒவியம், பேச்சுப் போட்டி மற்றும் ஸ்லோகன் எழுதும் போட்டிகள் பொள்ளாச்சி, கோவை, கோவை மாநகராட்சி அளிவல் நடத்தப்பட்டு பின்னர் ஜூன்- 27 ஆம் தேதி மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவற்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.



தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி, மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் கோயம்புத்தூர் மாவட்டம் குழந்தை தொழிலாளர்களற்ற மாவட்டமாக திகழ்கின்றது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சர்வதேச குழந்தை தொழில்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், இணை ஆணையர் (தொழிலாளர் நலன்) மாரிமுத்து, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...