நகைக்கடைகளில் நகை சீட்டு திட்டங்களை முறைப்படுத்தக் கோரி அகில பாரத இந்து மகா சபா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு


நகைக்கடைகளில் தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்குவதற்காக நகை சீட்டு என்ற சிறு சேமிப்பு திட்டங்கள் நடத்தப்படுகிறது. இதை அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு கடைக்கும் செய்கூலி, சேதாரம் வேறுபடுவதை ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும் என்றும் அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோவையில் பல நகைக்கடைகள் மற்றும் வடிவமைப்பு தொழிலகங்கள் செயல்பட்டு வருகிறது. பல சிறு சேமிப்பு திட்டங்களை அறிவிக்கும் நகைக்கடைகளில் மக்கள் தங்களால் முடிந்த மாதாந்திர தவணை தொகையை செலுத்தி வருகின்றனர். சூழ்நிலை காரணமாக சில நேரத்தில் தவணை தொகையை செலுத்த முடியாத நிர்பந்தம் ஏற்டுகிறது.

இச்சூழலை பயன்படுத்திக்கொள்ளும் நகைக்கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் கட்டிய தவணை தொகையினை பல காரணங்கள் கூறி திருப்பி கொடுக்க மறுக்கின்றனர். மேலும், செய்கூலி, சேதாரம் என மக்களிடம் அதிக பணத்தை வசூலிக்கின்றனர்.

தங்க நகைகள் பல ஆண்டுகளாக மக்களின் பாரம்பரிய காலாச்சார வாழ்வியலோடு சேர்ந்தே வந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பாக நூதனமான முறையில் மக்களின் பணத்தை சேமிப்பு என்ற முறையில் கொள்ளையடிக்கும் நகைக்கடைகளை கண்காணிக்க ஆய்வுக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். மேலும், இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நகை விற்பனையை முறைப்படுத்த வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...