கோவை மாவட்டம், தடாகம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மூங்கில்பள்ளம் பகுதியில் கடந்த சில தினங்களாக 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று சுற்றிவந்தது.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அப்பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூலை அருகே வந்த யானை அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்தது.

யானையின் அலரல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரத்தின உதவியுடன் தண்ணீர் தொட்டியின் ஒரு பகுதியை உடைத்து யானையை வெளியேற்றினர். தொடர்ந்து, அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குச் சென்றது.