மலேசியாவில் வைகோ அவமரியாதை செய்யப்பட்டது கண்டனத்திற்குறியது- கோவையில் தமிழக முதலமைச்சர் பேட்டி


அதிமுக ஆட்சியை கலைக்க பல்வேறு  முயற்சிகளை மேற்கொண்டும் அது பலிக்காததால், பாஜ கவின் பினாமி அரசு என திமுக செயல் தலைவர் ஸ்டாலின்  பேசி வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோட்டில் மேம்பாலம், குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டுவிழா பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகள் துவக்க விழா நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசாக செயல்பட்டு வருவதாகவும், தென்னை விவசாயிகள் அதிகம் உள்ள பகுதியான இந்த பகுதியில் நீரா பானம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், வறட்சியால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கபட்டு வருகிறது எனவும் குடிமாரமரத்து பணிகளுக்கு மேலும் 300 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு ஏரிகள், குளங்கள் மராமரத்து செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

மூத்த அரசியல்வாதியான வைகோ, மலேசியாவில் அவமரியாதை செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது எனவும் இது குறித்து கட்சி நிர்வாகிகள் ஏற்கனவே கருத்து தெரிவித்து இருப்பதாகவும், இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் எழுப்பும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலிதா அறிவித்தப்படி எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் எனவும், மத்திய அரசு தேர்வு செய்யும் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரவேண்டும் என்ற ஆர்வத்தால் ராஜினாமா செய்வதாக சொல்லியிருக்கின்றனர் எனவும்  தெரிவித்தார்.

மேலும் அதிமுக அணிகள் இணைப்பு குறித்த கேள்விக்கு, உட்கட்சி விவகாரங்கள் குறித்து பொது வெளியில் பேச முடியாது எனவும், எங்களுக்குள் பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் எதிர்கட்சி கேள்வி எழுப்பும் நிலையில்  தற்போதைய ஆட்சி நடைபெறவில்லை எனவும் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வியாபாரிகளை பாதிக்காத வண்ணம் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்ற வேண்டும் என  மத்திய அரசிடம், தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சியை கலைக்க சட்டமன்றத்திலும், வெளியிலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பல்வேறு  முயற்சிகளை மேற்கொண்டார் எனவும் அது பலிக்காத நிலையில் அவர்  தற்போதை ஆட்சியை பினாமி அரசு மற்றும் பாஜக-வின் பினாமி அரசு எனவும் பேசி வருகின்றார் எனவும் குற்றம்சாட்டினார். கடந்த காலங்களில் பாஜக-வுடன் கூட்டணி வைத்திருந்த திமுக அப்போது அவர்கள் குறித்து எதுவும் பேசவில்லை எனவும்  பச்சோந்தி நிறம் மாறுவதை போல திமுகவினர் சந்தர்ப்பவாதிகளாக நேரத்திற்கு நேரம் கருத்துகளை மாற்றிக் கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

திமுக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது மக்களுக்கான திட்டங்கள் எதையும் செய்யவில்லை எனவும் முல்லை பெரியாறு, பாலாறு, காவிரி பிரச்சினைகளில் அதிகாரத்தில் இருந்த போது எதையும் செய்யவில்லை  எனவும் குற்றம்சாட்டினார். ஆனால் காவிரி  விவகாரத்தில் அதிமுக அக்கறையுடன் செயல்படுவதாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வரும் போது விவசாயிகளின் உரிமை நிலை நாட்டப்படும் எனவும் முல்லை பெரியாறு, பாலாறு பிரச்சினைகளிலும் உரிமை நிலை நாட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

அத்திகடவு அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பணி துவங்கப்படும் எனவும் தமிழகத்தில் விவசாயத்திக்கு தேவையான நீர் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் அதிமுக அரசு மேற்கொள்ளும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...