கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையினை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடையினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், குடியிருப்புகள், கோவில்கள் நிறைந்த இப்பகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி, அக்கடையினை அகற்றக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளத நிலையில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், குற்றச்சம்பவங்கள் நடைபெறவும் காரணமாக இருப்பதாகவும், இங்குள்ள பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் கடையினை அகற்ற அரசிற்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.