மீட்டர் கட்டணத்தை அமலாக்க வலியுறுத்தி அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் மறியல்

கார்பரேட் நிறுவனங்களுக்கு மொத்தமாக பர்மிட் வழங்கும் ஆர்டிஓ நிர்வாகத்தை கண்டித்தும், மீட்டர் கட்டணத்தை அமலாக்க வலியுறுத்தியும் கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கார்பரேட் ஆட்டோக்கள் மற்றும் ஓலா, உபர் போன்ற வாகனங்களுக்கு எந்த வரைமுறையும் இல்லாமல் ஆர்டிஓ நிர்வாகம் பர்மிட்டுகளை வழங்கி வருவதாகவும், மீட்டர் கட்டணத்தை அரசு நிர்ணயிக்காத நிலையில் தாங்களாகவே நிர்ணயித்து கோவையில் இயக்கி வருவதாகவும் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் செயலை போக்குவரத்துத் துறை கண்டுகொள்ளாமல் உள்ளதாகவும், புதிய புதிய உத்தரவுளை பிறப்பித்து ஆட்டோ தொழிலாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் மத்திய அரசை கண்டித்தும்  கோவையில் ஆட்டோ தொழிலாளர்கள் மணிக் கூண்டு அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எம்எல்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது நீதிமன்ற உத்தரவை மீறி எப்சி செய்யாத வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் வசூலிப்பதை நிறுத்தக் கோரியும், மீட்டர் கட்டணத்தை அமல்படுத்தக் கோரியும் வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்ட 97 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...