உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி சார்பாக குப்பைபளை தரம் பிரித்தல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

உலக சுற்றுசூழல் தினத்தினை முன்னிட்ட கோவை மாநகராட்சி சார்பாக 100 சதவீதம் குப்பைகளை தரம் பிரித்தல் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சிகள் மே 5ம் தேதியன்று மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இந்திய அரசு மத்திய நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சரக இயக்குநர் மஜும்தார் சிறப்பு விருந்தினராக கொண்டு சிறப்புடன் நடைபெற்றது.



தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வுகள் மேற்கு மண்டல அலுவலகத்தில் வார்டு.23, ஆர்.எஸ்.புரத்தில் ஆணையர் தலைமையில் மத்திய நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சரக இயக்குநர் கொடியசைக்க 100 சதவீதம் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி தொடங்கப்பட்டது. அடுத்ததாக மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலை, தபால் நிலையம் சிக்னல் அருகில் அமைக்கப்பட்டிருந்த இணையதள கூடாரம் ஆணையர் தலைமையில் மத்திய நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சரக இயக்குநர் தொடங்கி வைக்க இணையதளம் மூலம் 100 சதவீதம் குப்பைகளை தரம் பிரிக்க மக்கள் உறுதிமொழி எடுத்தனர்.



இதனைத்தொடர்ந்து, வடக்கு மண்டலம் பீளமேட்டில் உள்ள குப்பை மாற்று நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் மத்திய நகர்பற வளர்ச்சித் துறை அமைச்சரக இயக்குநர் கொடி அசைக்க அதற்குரிய பிரத்யேக வாகனம் மூலம் மக்கும் குப்பை வெள்ளலூரில் உள்ள உரக்கிடங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. வடக்கு மண்டலம் தாமுநகர் சிப்ரஸ்ஓக் அடுக்ககத்தில் சுற்றுசூழல் மாசு ஏற்படாத பேட்ரி வாகனம் மூலம் குப்பையை சேகரிக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது. மத்திய மண்டலம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் எஸ்.என்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் 100 சதவீதம் குப்பைகளை தரம் பிரிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.

தூய்மை பாரத இயக்கத்தின் 100 சதவீதம் குப்பைகளை தரம் பிரித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் அனைத்து மண்டலங்களிலும் நடைபெற்று கோவை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக விழிப்புணர்வு கூட்டம் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.



அதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், மத்திய வளர்ச்சித்துறை அமைச்சரக இயக்குநர் மஜும்தார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையுரையாற்றினார்.

இக்கூட்டத்தினை அடுத்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மக்கும் மற்றும் மக்காத குப்பை சேகரிக்கும் தொட்டியின் நிறம் பச்சை மற்றும் நீலம் என்பதை தெரிவிக்கும் வகையில் பச்சை மற்றும் நீலநிற பலூன்கள் பறக்க விடப்பட்டன.



கோவை மாநகராட்சி பிரதான கூட்டரங்கில் சிந்தனை செய் மனமே என்ற சமூக விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது, இதில் குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தன்னார்வ தொண்டு பிரதிநிதிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...