விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வண்டல் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று கோவை மாவட்டத்திலுள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் தூர்வாரி வண்டல் மண் வழங்கும் பணி குறித்து வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், முதலமைச்சரின் உத்தரவின்படி கோவை மாவட்டத்திலுள்ள ஏரிகள் மற்றும் 246 குளங்களில் தூர்வாரும் மற்றும் இலவசமாக வண்டல் மண் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மூலம் கோவை மாவட்டத்தில் 4000 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.



வட்டாட்சியர் அலுவகத்தில் விவசாயிகள் சிட்டாவுடன் விண்ணப்பித்து, வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வண்டல் மண் எடுக்க உத்தரவு வழங்கிட வேண்டும்.

விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நஞ்சை நிலம் 1 ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் மண்ணும், புஞ்சை நிலம் 1 ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர் அளவிற்கும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர், அல்லது 10 டிராக்கடர் லோடு மண்ணும், மண்பாண்டங்கள் தயாரித்தலுக்கு 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடு மண்ணும் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு குளங்கள் தூர்வாருவதன் மூலம் குளங்களை ஆலப்படுத்துவது மட்டுமல்லாமல் விவசாயிகளின் விலைநிலங்களுக்கு பயன்படுத்துவதற்கான உரமண்ணும் விலையில்லாமல் கிடைக்கிறது. மேலும், மழைக்காலங்களில் போதிய அளவு நீர் தேக்கிக்கொள்ள முடியும். இதன்மூலம் எதிர்க்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதுமட்டுமின்றி விவசாயிகளுக்கும் போதிய அளவு தண்ணீர் தேக்கி விவசாய பணிகள் மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

கோவை மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் நன்மைகளை விளக்கி விழிப்புணர்வு மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (பொது) சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சந்திர சேகர், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலாகள், பொதுப்பணித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...