திருநங்கைகளுக்கு திருநங்கைகளே தொல்லை கொடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவையை சேர்ந்த திருநங்கைகளை பாலியல் தொழிலுக்கு வர சில திருநங்கைகள் வற்புறுத்துவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திம் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், ஒத்தகால்மண்டபம் பகுதியை சேர்ந்த திருநங்கை பூர்நித்தா என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், திருநங்கைகள் ஜமாத் என்ற அமைப்பில் திருநங்கைகளை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர். அதனால் அந்த அமைப்பில் இருந்து வெளியேறி திருநங்கைகள் மறுவாழ்வு மற்றும் விழிப்புணர்வு சமூக நலச்சங்கம் என்ற பெயரில் இயக்கம் துவக்கப்பட்டு நன்முறையிலான பல பணிகளை திருநங்கைகளாகிய நாங்கள் செய்து வருகிறோம். இருப்பினும், தங்களை பாலியல் தொழிலுக்கு வரவும், எந்தவித புதிய அமைப்பும் தொடங்கக்கூடாது என்றும் கூறி கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. 

தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்திம், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் காவல்துறையினர் மறுத்து வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...