கோவை மாவட்டம் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சில குறிப்பிட்ட கால்நடைகளை வெட்டத் தடை விதித்து, விவசாயிகள், தலித்துகள், சிறுபான்மை மக்கள் ஆகியோருக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து ஒட்டு மொத்த மக்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை, ஆத்துப்பாலம் பேருந்து நிலையத்தின் அருகில் இன்று மதியம் 2.30 மணிக்கு துவங்கியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள கால்நடை விற்பனை தடை சட்டத்தின் மூலம் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை விற்கப்படுவதையும், வெட்டப்படுவதையும் தடை செய்து நாட்டில் மீண்டும் ஒரு ஜனநாயக படுகொலையை செய்துள்ள மோடி தலைமையிலான பாஜக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டம் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் பேசுகையில், இந்திய நாட்டில் 80 சதவிகிதம் மக்களின் உணவு முறையான மாட்டு இறைச்சியை தடை செய்வது அவர்களின் பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாகும். உணவு உண்பது என்பது தனிமனித உரிமை, அதில் எந்த அரசும் தலையிட முடியாது. மேலும் நம் நாட்டில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் விவசாய மக்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு மென்மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக இச்சட்டத்தை அறிவித்துள்ளது. பசு பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டின் சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மீது நடத்தப்படும் வன்முறையை ஊக்குவிக்கும் விதமான இந்த மக்கள் விரோத சட்டத்தை பாஜக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

மேலும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கேரளா, புதுச்சேரி, கர்நாடக அரசுகளை போன்று தமிழக சட்டமன்றத்திலும் மத்திய அரசின் கால்நடை விற்பனை தடை சட்டத்திற்கு எதிரான தீர்மானம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோவை மாவட்டம் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

இதில் திராவிட அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள், மாணவர், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.