கோவை வாழும் கலை பவுன்டேஷன் சார்பில் ராஜவாய்க்காலை சுத்தம் செய்யும் பணி துவக்கம்

கோவை வாழும் கலை அமைப்பின் சார்பில் கடந்த 8 நாட்களாக கோவையின் நொய்யல் நதியின் முக்கிய கிளையான ராஜவாய்க்காலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.



இதுகுறித்து வாழும் கலை அமைப்பின் தமிழ்நாடு அபெக்ஸ் பாடி உறுப்பினர், சந்திர மோகன குமார், மாநில ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் கே.ஆர். தாமோதரன் மற்றும் முதுநிலை ஆசிரியர் சசிரேகா வெங்கடேஷ் ஆகியோர் கூறியதாவது:-



கோவையை நொய்யல் நதி வளமாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நதியின் மிகவும் முக்கியமான கிளையாக விளங்குவது ராஜவாய்க்கால். இந்த வாய்க்கால் நொய்யல் நதியுடன் ஏழு குளங்களை இணைக்கிறது. கோவை வாழும் கலை பவுன்டேஷன் சார்பில் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வாய்க்காலை சுத்தம் செய்வதன் மூலமாக கோவை நகரின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும்.

இந்த வாய்க்காலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து எட்டு நாள்கள் நடைபெற்று வருகின்றது. இது வரை சுமார் 12.5 கி.மீ தூரத்தை சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணி முடிந்தவுடன் வாய்க்கால் மிகவும் சுத்தமாகக் காட்சி அளிக்கின்றது. இந்தச் சுத்தம் செய்யும் பணி மக்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த வாய்க்காலை சுற்றியுள்ள 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அந்தப் பகுதி விவசாயிகள், ராஜவாய்க்காலுடன் சித்திரைசாவடி தடுப்பு அணையையும் சுத்தம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து வாழும் கலை மையம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலை 8 மணி முதல் சிதிதிரைச்சாவடி தடுப்பனையை சுத்தம் செய்யும் இணையை வேலை நடைபெறும். இந்த சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வலர்களும், அந்தப் பகுதி மக்களும் பங்கேற்க உள்ளனர்.

மேலும், இந்தப் பணியில் கோவை மாநகர காவலர்களும் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்வில் அனைத்துத் தரப்பு கோவை மக்களுடன் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறோம். பருவ மழை வருவதற்குள் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பணியில் பங்கேற்க விரும்புவோர், தங்களது பெயர் மற்றும் முகவரியை அருகில் உள்ள வாழும் கலை மையத்தில் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான போக்குவரத்தும், மதிய உணவும் அளிக்கப்படும். சொந்தமாக வாகனங்களை வைத்திருபோர், பேரூர் மாதம்பட்டி அருகே உள்ள தடுப்பு அணைக்கு வர வேண்டும். தன்னார்வலர்களும், வழியில் வைக்கப்பட்டுள்ள பிள்க்ஸ் போர்டுகளும் உங்களுக்கு வழிகாட்டும். இதைத் தவிர, மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94426 35208 தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...